
கடலூரில் இரவில் வட்டமடித்ததாகக் கூறப்படும் விமானங்கள்: பல கிராமங்களில் கேட்ட பேரிரைச்சல்
கடலூர் மாவட்டத்தின் தியாகவல்லி, நொச்சிக்காடு, திருச்சோபுரம், கடலூர் துறைமுகம், பரங்கிப்பேட்டை, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்றிரவு இரண்டு விமானங்கள் அதிக சத்தத்துடன் வட்டமடித்ததாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். திடீர் சத்தத்தால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து வானத்தைப் பார்த்தனர். விமானங்களின் அடையாளம் மற்றும் பறப்புக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை.









